பணிப்புறக்கணிப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம்.

 


இன்று முதல் வட மாகாணத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
 
வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு ஆட்சேபணை தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அதன் உப செயலாளர் காரளசிங்கம் பிரகாஷ் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.