மட்டக்களப்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்கு கண்டனம்; தெரிவித்து கிழக்கு பல்கலை கழக ஆசிரிய சங்கம் பணிப்புறக்கணிப்பு!













கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டினை கண்டித்து  30 ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் உள்ள  பழைய விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தினை  முன்னெடுத்தனர்.

கிழக்குப்பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமானது (TAEU) பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்கள் இதுவரை  நிறப்புப்படாமல் உள்ளதாகவும், இதனால் வேலைப் பளு அதிகரித்துள்ளதாகவும், ஆட்சியாளர்கள் தூங்குகின்றார்கள் பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியில், எதிர்காலத்தை பாதுகாக்க அரசே பல்கலைக்கழகங்களை பேணு, அளித்த வாக்குறுதிகளுக்கு இப்போதே மதிப்பளி, போன்ற பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.