வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

 


வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
 
தேடுதலுக்கான நீதிமன்ற கட்டளை இன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, சட்டத்தரணிகள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
 
அதன்படி, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று தமது சட்டத்தரணிகள் கடமைகளுக்குச் செல்லாது, எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் குமாரவடிவேல் குருபரன் அறிவித்துள்ளார்.