தாயக ஊற்று அமைப்பின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு இறுதி நாள்!









மட்டக்களப்பு வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் அனுசரணையில் இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான மாபெரும் விசேட வலுவூட்டல் கல்விக் கருத்தரங்கு தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ. சிறிநாத் அவர்களின் வழிகாட்டலிலும் தாயக ஊற்று அமைப்பின் தலைவர் கா.இராமச்சந்திரன் தலைமையில் கடந்த 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் இறுதி கருத்தரங்கு வந்தாறுமூலை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் வளவாளர்களாக இரசாயணவியல் ஆசிரியர் திரு.மயூரன், இணைந்த கணிதப் பாட வளவாளர் திருமதி.K.குணாளினி, உயிரியல் பாட வளவாளர் திருமதி.விஜி தனராஜ், பௌதீகவியல் பாட வளவாளர் திரு. சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பங்குகொண்ட மாணவர்களுக்கு கடந்த கால வினாவிடை கையேடுகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.

இக் கருத்தரங்கில் சுமார் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டதுடன் இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உப தலைவருமான திரு.த.பிரபாகரன், ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 (ந.குகதர்சன் )