கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி நேபாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ‘கெஹல்பத்தர பத்மே’வின் கூட்டாளி எனக் கூறப்படும் சந்தேகநபர்கள் உள்ளிட்ட மொத்தமாக 5 சந்தேகநபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தியைக் கைது செய்ய அண்மையில் ஒரு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் ஆதரவுடன் கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவு இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.