வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞர் சுஜி பொற்செல்வி எழுதிய "இசைக்கும் மொட்டுகள்" (சிறுவர்பாடல்) மற்றும் "கருத்தூறல்"ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

 


 













 வாழைச்சேனை  பேத்தாழை விபுலாநந்தர் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக
 வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞர் சுஜி பொற்செல்வி எழுதிய "இசைக்கும் மொட்டுகள்" (சிறுவர்பாடல்) மற்றும் "கருத்தூறல்" ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு தனியார் விடுதியில்  இடம்பெற்றிருந்தது.

கலை மன்றத் தலைவர் மரகதம் பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக  வைத்திய அதிகாரிகளான கிரிஸ்ரி சஞ்ஜீவன் பெர்னான்டோ, சரணியா சஞ்ஜீவன் பெர்னான்டோ, கோறளைப்பற்றுப் பிரதேச சபையின் செயலாளர் சு.ராஜ்கீதன், ஓய்வுநிலைப் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜே.ஏச்.இரத்தினராஜா, சமூகசேவகர் க.யுவராஜன், அதிபர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்போர் கலந்திருந்தனர்.

இசைக்கும் மொட்டுகள் நூலிற்கான நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன் ஆற்றியிருந்தார். கருத்தூறல் நூலிற்கான நயவுரையினை கவிஞர் தமிழ்க்கீரன் ஷர்மிதன் ஆற்றியிருந்தார். 

அதிதிகள் கெளரவம், நயவுரைஞர் கௌரவம், கலை நிகழ்வுகள், பாராட்டுகள், நூல் வெளியீட்டு என்பன இடம்பெற்றது.

 

 ந.குகதர்சன்