ஆசிரியர்கள் நெருக்கீடுகளை எதிர்கொள்ளும் திறனுடையவர்களாக மாறுவதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு உளவியல் கல்வியை முறையே கற்று , நெருக்கீடுகளை எதிர்கொள்ளும் அடிப்படை வழிமுறைகளைகளையும் தெரிந்திருப்பது அவசியமானதாகும்.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை விரிவுரையாளரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும்,உளசமூக வலுவூட்டல் வளவாளருமான திரு.S.பிரான்சிஸ் தெரிவித்தார்.
ஒக்டோபர்,10 சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஈச்சந்தீவு இராம கிருஷ்ண மிஷன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்,திரு. K.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 10.10.2025 அன்று மனநல வழிகாட்டல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் தமது கற்பித்தல் பணியில் நாளாந்தம் பல்வேறுபட்ட சவால்களை சந்தித்து வருகின்றனர். இச்சவால் களினால் ஏற்படும் நெருக்கீடுகளை இலகுவான முறையில் எதிர்கொண்டு மகிழ்ச்சியாக கற்பித்தல் பணியை மேற்கொள்வதற்கும் மாணவர்களை நேர்மறை மனப்பான்மை உடையவர்களாக உருவாக்குவதற்கும் பொருத்தமான உளவியல் பயிற்சிகளை துல்லியமாக வழங்குவதற்கு கொழும்பு MIU பல்கலைக்கழகமானது என்றும் ஆதரவாக இருக்கும்.அதற்கு அதிபர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
அப்போதுதான் உடல்,உள,சமூக,ஆன்மீகம் கொண்ட உளச்சுகாதார வாழ்க்கை முறையை விரிவாக அவர்கள் தெரிந்து வைத்திருப்பதுடன் அதனை பின்பற்றவும் மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரவும் முடியும்..
அது மாத்திரமல்லாது தன்னைத்தானே புரிந்து கொண்டு மற்றவர்களையும் இலகுவாக புரிந்து கொள்வதுடன் தொடர்ச்சியாக தம் வாழ்வில் ஏற்படும் இடையூறினை எதிர்கொண்டு வீட்டில் மகிழ்ச்சியாக செயற்படுவதுடன் தொழில் புரியும் இடத்திலும் ஏனைய இடங்களிலும் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தக் கூடியவர்களாகவும் உள ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க ஆர்வம் கொண்டு செயல்படுபவராகவும் காணப்படுவார்கள்.
இல்லையேல் மன அழுத்தப்பிரச்சி
னைகளுக்கு உள்ளாவதுடன் நாளாந்த வாழ்வில் தொடர்ச்சியாக ஏற்படும் நெருக்கீடுகளை எதிர்கொள்ள முடியாமல் மனநல சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம்.
இவ்வாறான நிலைகள் ஏற்படும்போது பிரச்சினைகளை நம்பிக்கையான ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளாது தம் மனதில் அடக்கி வைப்பதாலேயே சின்னச் சின்ன சவால்களைக்கூட எதிர்கொள்ள முடியாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைவரும் தவறான முடிவுகளையும் எடுக்கின்றனர். அந்நிலை ஏற்படாமல் ஒவ்வொருவரும் உளவியல் வழிமுறைகளை பின்பற்றி அழுத்தங்களை எதிர்கொண்டு வாழ்வது சிறந்தது என்றார்.
பாடசாலையின் அதிபர் திரு.K.திருச்செல்வம் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாறான பயிற்சிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் நடார்த்தப்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக கற்பிப்பதற்கும் மாணவர்கள் திறம்பட கற்பதற்கும் உந்துசக்தியாக இருக்கும் இவ்வாறான பயிற்சிகளை தொடர்ந்தும் நடார்த்துவதற்கான ஆதரவை நாங்கள் வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.
இன்று புதுமையான அனுகுமுறை முறையில் பயிற்சிகள் இடம்பெற்றது அதனால் இலகுவில் விளங்கிக்கொள்ள கூடியதாகவும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. MIU பல்கலைக்கழக மாணவி தனுஜாவின் செயல்முறை பயிற்சி மற்றும் ஆசிரியர்கள் இலகுவில் விடயங்களை மனதில் பதிந்து கொள்ளும் வகையிலான விரிவுரை அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தது.
இதுபோன்ற பயிற்சிகளை தொடர்ந்தும் எமது பாடசாலைக்கு நடார்த்த வேண்டும் என தெரிவித்ததுடன் MIU பல்கலைக் கழகத்திற்கு மனப்பூர்வமான நன்றியையும் தெரிவிக்கின்றேன் என கூறினார்.
பிரதி அதிபர் திரு. M.கஜேந்திரராஜா கருத்துத் தெரிவிக்கையில்,
மனநல தினத்திற்காக இடம் பெற்ற இந்த நிகழ்வானது இன்றுடன் மாத்திரம் அல்லாமல் தொர்ந்தும் எமது பாடசாலைக்கு தேவை என்பதுடன் பயிற்சிகள் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது என கருத்துத் தெரிவித்ததுடன் தமது பாடசாலை மட்டுமல்லாமல் இப்பகுதியில் காணப்படும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இப்பயிற்சி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும் . இப்படியான பயிற்சிகள் இன்மையே எமது மாணவர் சமூதாயம் வழிதவறி போவதற்கு பிரதான காரணமாகும் எனத் தெரிவித்தார்.
மேற்படி பாடசாலையின் உளவளத்துணை ஆசிரியை திருமதி அருன் சுவாஜினி அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் , கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவு மாணவி செல்வி. S.தனுஜா அவர்களால் மாணவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் அறிவு,திறன், மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளும் கையிலான மகிழ்விக்கும் விளையாட்டுக்களும் நடார்த்தப்பட்டதுடன் பல்கலைக்கழக உளவியல் பிரிவு மாணவர்களான S.சிவகுமார்,J.திபேஸ்கரன்,
T.தவலஷ்சனா, T.பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை திறம்பட சிறப்பித்தனர்.

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)




