காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள்
இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு
அடுத்தபடியாக இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின்
சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
2016
முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்டுகளில், இலங்கையில் சுமார் 2
இலட்சத்தில் 80 ஆயிரம் சிறுவர்கள் (மொத்த சிறுவர் சனத்தொகையில் 4.6%)
இடம்பெயர்ந்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் மொத்தம் 69 இலட்சம் சிறுவர்களின் இடம்பெயர்வுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் மிக உயர்ந்த சதவீத பாதிப்பைப் பதிவு செய்துள்ளது, அதன் சிறுவர் சனத்தொகையில் சுமார் 7.2% பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இலங்கையில், சராசரியாக ஒவ்வொரு அனர்த்தத்துக்கு சராசரியாக 965 சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
புயல்கள் பெரும்பாலான இடம்பெயர்வுக்கு காரணமாகியுள்ளதுடன், அவை 54% இடப்பெயர்வுக்கு காரணமாக இருந்துள்ளன.





