மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

 


வவுனியா - புளியங்குளம் வடக்கு ஏ9 வீதி புதூர் சந்தியில் தோட்ட காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த   மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. 

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்ததை அடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிசாருக்கும் தகவலை வழங்கியதை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.