
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச சுனாமி விழிப்புணர்வுத் தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 திகதியினை முன்னிட்டு இந்திய சமூத்திரத்தில் சுனாமி பயிற்சிகளானது காத்தான்குடியில் இடம் பெறவுள்ள நிலையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் எற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் மட்டக்களப்பு காலி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்முறை நெட்டுரு பயிற்சி (Mock Drill) இடம் பெறவுள்ளன.
இந் நிகழ்வின் வளவாளராக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி, பிரதிப்பணிப்பாளர் மகேந்திர ஜெகத், திருகோணமலை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.சுகுனதாஸ் ஆகியோர மேற்கொண்டனர்.
இதன் போது சுனாமி அலை தாக்கம் ஏற்படும் போது மக்களை எவ்வாறு பாதுகாப்பது எவ்வாறான முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் 243 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் பிரதீப்களுபான, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், முப்படை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் உயர் அதிகாரில், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி பேர் அலையினால் 2836 நபர்கள் உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.