“ உலகை வழி நடத்த சிறுவர்களைஅன்பால் போஷியுங்கள் “எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர்களை பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு

 

 

 


 








































 “ உலகை வழி நடத்த சிறுவர்களைஅன்பால் போஷியுங்கள் “எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர்களை பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபங்கு  பற்றிய  விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு பழைய மாவட்ட  செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது .
மாவட்ட செயலாளரும் , அரசாங்க அதிபருமான   . ஜே. எஸ். அருள்ராஜ்  பிரதான அதிதியாக பங்கேற்றிருந்தார்.

 பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினூடாக  சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 
“ உலகை வழி நடத்த சிறுவர்களைஅன்பால் போஷியுங்கள் “எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர்களை பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபங்கு என்னும் தலைப்பின் கீழ் இவ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்துவதற்கு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

 
இக் கருத்தரங்கின் நோக்கமானது 

ஒரு பிள்ளை சமூகமயமாக்கப்படும் ஒரு பிரதான இடமாக முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் இருப்பதால், பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபாகம் பற்றி அறிமுகம் செய்தல்

பிள்ளைகள் தொடர்பாக தற்போதிருக்கின்ற சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதன் மூலம். முன்பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் மற்றும் வெளிவாரி சமூகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற வன்முறைகளைக் குறைப்பதற்காக முன்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளல்.

பிள்ளைகளுக்குத் தேவையான ஏனைய உதவிச் சேவைகளை வழங்குவதில் முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்.

முன்பள்ளி ஆசிரியர்களிடையே பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல்

பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளை அடையாளம் கண்டு. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் முன்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளல் என்பனவாகும் .

 மட்டக்களப்பு  மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களும் உள்ளடங்கும் வகையில் 125 முன்பள்ளி ஆசிரியர்களை பங்கேற்கும் வண்ணம்  இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .