முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால்
பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு
மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, இந்த இல்லங்கள் விரைவில் மேல் நீதிமன்றக் கட்டடங்களாக மாற்றப்படவுள்ளன.
இதில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம பயன்படுத்திய இல. B 88 கிரகெரி வீதி, கொழும்பு 7 என்ற முகவரியில் உள்ள இல்லம், மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயன்படுத்திய பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இல்லம் (இல. C 76), முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பயன்படுத்திய விஜேராம மாவத்தையில் உள்ள இல்லம் (இல. B 108) மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த ஆர். சம்பந்தன் பயன்படுத்திய ஸ்டான்மோர் சந்திரவங்கய வீதியில் உள்ள இல்லம் (இல. B 12) ஆகிய நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களும் மேல் நீதிமன்றங்களாக மாற்றப்படவுள்ளன.
இந்த நடவடிக்கையானது நீதிமன்றங்களுக்கான இடவசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.