இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தது ஏன் ?

 


நாளை(22) இளஞ்சிவப்பு  நிற ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று சபாநாயகர் இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 
 
ஒக்டோபர் மாதத்தில் உலகளாவிய மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வர சபாநாயகர் அறிவித்தார். 
 
நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டிய சின்னத்தைப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தயாரித்துள்ளதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்த சின்னம் வழங்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.