சட்டவிரோத நடவடிக்கைகள்
மூலம் பெறப்பட்ட ஆதனங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள விசேட காவல்துறை
பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், குற்றவாளிகள் மற்றும்
போதைபொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட தனிநபர்களின் சட்டவிரோத ஆதனங்கள்
குறித்து இந்த பிரிவு விசேட விசாரணைகளை மேற்கொள்ளும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதனங்கள் குறித்து விசாரணைகளை
மேற்கொள்ளல், பறிமுதல் செய்தல் போன்ற செயல்பாடுகளின் போது இந்த பிரிவு
கையூட்டல் ஒழிப்பு ஆணையகம் போன்ற அரச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட குற்றவியல் வருமான சட்டத்தின் விதிகளுக்கு அமைய காவல்துறை
மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இந்த பிரிவு செயல்படவுள்ளது.





