‘சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் தேசிய நிகழ்வு நடைபெற்றதோடு அதனுடன் இணைந்ததாக ஒக்டோபர் 01-05 வரை குடியிருப்பு வாரம் அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி வசதி அற்ற சுமார் 4,000 ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வகையில், வீடமைப்பு அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், நிறைவு செய்யப்பட்ட ஆயிரம் வீடுகளை இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.