தாய் நாட்டைக்காக்கும் இராணுவ பணியில் சுமார் 22 வருடங்கள்ப சேவையாற்றி கடந்த 28.09.2025ம் திகதியும் ஓய்வுபெற்ற தனது சொந்த மண்ணுக்குத் திரும்பிய சார்ஜன்ட் மேஜர் எஸ்.ஐ.எம்.புகாரி (USP, RSP) அவர்களுக்கு கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பினால் வரவேற்பும் கௌரவிப்பும் ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க்கில் வழங்கப்பட்டது.
கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்பு நிகழ்வில் பொருளாளர் எம்.லெத்தீஃப், சிரேஷ்ட ஆலோசகர்களான அல்ஹாஜ் இல்யாஸ் மௌலவி, எஸ்.சதீக் ஆசிரியர், உப செயலாளர் ருஸ்தான், பிரதம நிர்வாக உத்தியோகத்தர் முஜீப் அஹமட், கணக்குப்பிரிவு பொறுப்பாளர் அப்ரின், ஆலோசகர்களான ஃபஜீர், எம்.பி.பௌறுதீன், கபீர், உறுப்பினர்களான அசீஸ், இஜாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன், நாட்டிற்கு ஆற்றிய சிறப்பான சேவைக்காக வாழ்த்தி, நன்றி தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், கல்குடாவிலுள்ள ஓய்வுபெற்ற முப்படை பாதுகாப்பு வீரர்களை ஒன்றிணைத்து அமைப்பொன்றை உருவாக்கல், பிரதேச இளைஞர்கள் நாட்டின் பாதுகாப்புப் படைகளில் இணைவதற்கும், மக்கள் மத்தியில் நாட்டிற்கு சேவை செய்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தல், முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ந.குகதர்சன்


.jpeg)






