மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறி.

 


மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுதுறையினை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிர்வகத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட பயிற்றுநர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறி சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில்,

மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.ஆதம், தேசிய விளையாட்டு விஞ்ஞான நிர்வாகத்தின் வளவாளர்களான விரிவுரையாளர் எம்.எல்.எம்.சஜ்னாஸ், தேசிய மட்ட தைகொன்டோ விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.ரொமேஸ் ரத்னசேகர ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பயிற்சி நெறியானது தொடர்ந்து நான்கு நாட்கள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு கட்டட தொகுதியில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி நெறியில் விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 60 பேர் பங்கு கொண்டுள்ளனர்.

தைகொன்டோ, கபடி, பழுதூக்கல், தடகளம் மற்றும் உடல் வலுவூட்டல் தொடர்பான விளையாட்டு சிறப்பு பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.