மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச கண்டியனாறு பிரதேசத்திற்கான முழுநாள் கள விஜயமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மேற்கொண்டிருந்தார்.

 








 

 மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச கண்டியனாறு பிரதேசத்திற்கான முழுநாள் கள விஜயமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்  மேற்கொண்டிருந்தார். 


அதன்படி குறித்த பிரதேசத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் குறித்து குறித்த பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் குறுத்த விடயங்கள் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்தார்.

இதன்போது, கண்டியனாறு குளம், அடைச்சகல் குளம், நல்லதண்ணியோடை ஆகிய குளங்களின் புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும், பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள் மற்றும் இதுவரை மின்சாரம் வழங்கப்படாதுள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

தொடர்ந்து யானைப் பிரச்சினை உள்ள இடங்கள், பிரதேசத்தின் மக்களின் நலன் கருதி மருத்துவ சேவையினை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

மேலும் குறித்த விடயங்கள் தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தில் முன்னைய நாள் பிரதேச சபை உறுப்பினர், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.