மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர் செய்கை பிராந்திய அலுவலகத்தினால் உரம் வழங்கி வைக்கும் நிகழ்வு.

 

 






ஜனாதிபதி செயலகத்தின் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்திற்கு அமைவாக
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் கிழக்கு மாகாண தென்னை பயிர் செய்கைக்கான  உரம் மானிய அடிப்படையில் வழங்கி  வைக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர்   வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமையை இவ்வாறான திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு கட்டமாகவே
மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர் செய்கை  பிராந்திய அலுவலகத்தினால் உரம் வழங்கி  வைக்கும் நிகழ்வு இன்று  பிராந்திய முகாமையாளர் கா. ரவிச்சந்திரன் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர் செய்கை   சபையினால்  தெரிவு செய்யப்பட்ட 80 பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் உரம் வழங்கும் நிகழ்வும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி சம்பந்தமான விரிவாக்கம் பற்றிய விழிப்புணர்வும்  விவசாய கடன் உதவி வழங்கும்  நிகழ்வும் மட்டக்களப்பு கல்லடியில்  இடம் பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர்   செய்கை பிராந்தி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்களை  என பலரும் 
 நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 வரதன்