சம்மாந்துறையில் கடும் காற்றால் கடும் சேதம்!


 

 








சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால்,  பல மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிரின் பணிப்புரையின்படி வீதிகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள், விரைவாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட்டின் நேரடி கண்காணிப்பில், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு,  வீதிகளில் விழுந்த மரங்கள் இரவோடிரவாக வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
 

 

( வி.ரி. சகாதேவராஜா)