யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கங்குளம் பகுதியை அண்மித்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக நடவடிக்கைகளை பனிக்கங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





