அருட்பிரகாச
வள்ளலாின் அவதார நாளான நாளை(05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார்
வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகள்.
காலை 09 மணி முதல் பாண்டிருப்பில் உள்ள வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் நடைபெறவுள்ளது.
வள்ளலார்
வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தின் ஸ்தாபகர் வல்லவர் தவத்திரு புண்ணிய
மலர் அம்மா தலைமையில் இவ் அவதார தின விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுகளில்
அருட்பெருஞ்ஜோதி கீதம், இசைத்தல். ஜோதிசுடர் எற்றுதல்,தியானம், யோகாசனம்,
வள்ளலாரின் போதனைகள், என்ன பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக.
வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தின் ஆன்மீக இணைப்பாளர்
ந.சௌவியதாசன் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அடியார்கள். இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவின்
கடலூர் மாடட்டம் மருதூரில் 1823 அக்டோபர் 05 ஞாயிற்றுக்கிழமை நாள் அன்று
இராமையா சின்னம்மை ஆகியோருக்கு இறைவனால் பூவுலகிற்கு வருவிக்கப்பட்டவரே
அருட்பிரகாச வள்ளலார் என போற்றப்படும் இராமலிங்க அடிகளார் ஆவார் என்பது
குறிப்பிடத்தக்கது.
( வி.ரி. சகாதேவராஜா)