நாட்டில் ஏற்பட்டுள்ள
இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் சிங்கள மக்களின் மனதை வெல்ல வேண்டும்.
அதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு சர்வதேச நாடும் இலங்கையை தனது
வர்த்தக நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர நாட்டில்
உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போராடி தோற்ற நாம் சிங்கள
மக்களுடன் ஒற்றுமையாக இருந்து நம் மனநிலையை உணர்தினால் மட்டுமே அதற்கான ஒரு
தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.