அரசாங்கம் விரும்பிய வரி வருவாய் இலக்குகளை அடைய வேண்டுமானால், மக்கள்
மதுபானங்களை வாங்குவதற்கு வசதியாக விலைகளைக் குறைக்க வேண்டும் என்று
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று (22)
நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"மக்களால் மதுபானங்களை வாங்க
முடியாவிட்டால், நீங்கள் விரும்பிய வரி வருவாயை வசூலிக்க முடியாது.
அதனால்தான் நான் அதிவிசேஷ மதுபானத்தின் விலையைக் குறைக்க வலியுறுத்தி
வருகிறேன்" என்று சாமர சம்பத் தஸநாயக்க கூறினார்.
ஒரு அதிவிசேஷ
மதுபானத்தின் விலை இன்று ரூ. 4000க்கு அதிகமாக உள்ளது. விலையைக் குறைத்தால்
மக்கள் வாங்குவார்கள் என்றும், ஒரு போத்தலின் விலையை ரூ. 2500க்கு விற்க
முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.