மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.












மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாதகல்மடு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் காட்டு யானை தாக்கி பலியாகியுள்ளார்.

58 வயதுடைய வயிரமுத்து மலர் என்பவர் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று (20) திகதி அதிகாலை 1.30 மணியளவில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.

திடீர் மரண விசாரனை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினரிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு வவுணதீவு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.