தமது அரசியல் பயணத்தில் மக்கள் மத்தியில் தாம் கட்டியெழுப்பிய
இதயப்பூர்வமான பிணைப்பு மற்றும் மக்கள் அன்பின் தனித்துவமான மதிப்பு
குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலமான கருத்துக்களை
வெளியிட்டுள்ளார்.
தமது பேஸ்புக் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ள
அவர், வாழ்க்கையின் பெரும்பகுதியை மக்கள் மத்தியில் கழித்த தனக்கு,
அவர்களின் அன்பும் நம்பிக்கையும் நன்றாகப் பழக்கப்பட்டுவிட்டதாகக்
கூறியுள்ளார்.
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கமற்றது. எனவே, அதன் மதிப்பு
ஏனைய அனைத்தையும் விட அதிகமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு
அரசியல் உறவு மட்டுமல்ல, ஒரு இதயபூர்வமான பிணைப்பு என்பதால், இதை
முறியடிப்பது கடினம் என்றும், இந்த பிணைப்பை உடைக்க செய்யப்படும்
முயற்சிகள் மேலும் அதை பலப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு
மக்கள் தலைவராகப் பெறக்கூடிய அதிகபட்ச மகிழ்ச்சியை, மக்கள் மத்தியில் நான்
கழிக்கும் இந்த காலம் முழுவதும் நான் அனுபவிக்கிறேன். அனைவருக்கும் எனது
மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.