மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்த சோகை நோயை கட்டுப்படுத்த கர்ப்பினி பெண்களுக்கு முருங்கை இலை பாவனையை ஊக்குவிக்கும் முன்னோடி வேலை திட்டம் முன்னெடுப்பு!




 





















 






 
 
 












சுகாதார வைத்திய அதிகாரிகளினால் ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கான முருங்க  இலை பாவனைகளை ஊக்குவிக்கும் முன்னோடி திட்டம் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் இன்று  07.10.2025 காலை கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கு திறனை மேம்படுத்த பெண்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஆரையம்பதி  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முருங்கை விவசாயத்தை ஊக்குவித்தல் ஏர்ன் சிலோன்-Earn Ceylon நிறுவனத்தின் முன்னோடி திட்டத்தின் கீழ் "இலையூட்டல்" ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் 
முருங்கை இலை பாவனையை ஊக்குவித்தல் சம்பந்தமாக earn ceylon நிறுவனத்தின் பணிப்பாளர்,  குணசீலன் சதீஷ்குமார்,  இணைப்பாளர் தயாளசீலன் மயூரன் அவர்களினால்( 45)கர்ப்பிணி பெண்களுக்கு  150 முருங்கை மர கண்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக ஆரையம்பதி சுகாதார வைத்திய  அதிகாரிகளினாலூம் Earn Ceylon நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும்,  இணைப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பரிசோதகர்களினால் வழங்கி வைக்கப்பட்டது  இதில் RDHS அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

   மட்டக்களப்பினை  மையமாகக்கொண்டு  சமூகஉணர்வு செயற்பாடுகளுடன்" இலையூட்டல்" முருங்கை இலை பாவனையை ஊக்குவித்தல் ஒருபகுதியாக முன்னெடுத்துவரும் ஏர் சிலோன்-Earn Ceylon நிறுவனம்
மட்டக்களப்பு  பிரதேசத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது அதன் ஒரு அங்கமாக ஆரம்ப கலந்துரையாடல் இடம்பெற்றதனை தொடர்ந்து மட்டக்களப்பு மருத்துவமனைகள் நிபுணர் சங்கம் மற்றும், லண்டன்" மருத்துவ நிபுணர் சங்கம் இதில் கைகோர்த்திருந்தது. 

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளான வைத்தியர் தனுஷியா விக்னேஸ்வரன், குயிந்தன் ரெட்னதேவ், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் திலக்சன்,  மட்டக்களப்பு வைத்தியசாலைகள் நண்பர்கள் அமைப்பின் (லண்டன் - FOBH) தலைவியும்,  தமிழ் மருத்துவர் நிபுணர் சங்கம் (லண்டன் - MIOT) அமைப்பின் போசகருமான
வைத்திய கலாநிதி காந்தா நிறஞ்சன் பங்கேற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகளையும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரத்த சோகை நோயை கட்டுப்படுத்துவதற்கு முருங்கை இலைகளின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் பற்றி இதன்போது விளக்களிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.