தீபம் ஏற்றி வழிபடுவது எமது சமயத்தில், சமூகத்தில் முற்காலம் முதற்கொண்டு காணப்படுகிறது. ஓர் தீபத்தை ஒளிரச்செய்ய வேண்டுமானால் அதற்கு ஆரம்ப ஒளிரூட்டும் சக்தி ஒன்று தேவை.
அந்த முதல் சக்தியே, ஒளியே பரமாத்மா என்கிறோம். அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள் என பார்க்கிறோம். ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும். இதை உணர்த்தும் வகையில் தான் தீபாவளி பண்டிகை காணப்படுகிறது.
இதனை ஒத்த வகையில் குடும்பம் என்றாலும் சரி சமூகம் சார்ந்த நிலையிலும் சரி தேசம் சார்ந்த நிலையிலும் சரி முதல் ஒளி, முதல் சக்தி சிறப்புடன் அமைய வேண்டும்.
எமது தேசத்தில், குறிப்பாக தமிழ் மக்கள் கடந்து வந்த தடம் மிகவும் கடினமானது. தற்காலம் கூட இக்கடினகாலம் வேறு வகையில் தொடர்கிறது.
குறிப்பாக ஒரு மனிதனை பூரணமாக்குவது கல்வி. இக் கல்வி நிலையில் முன்னைய காலத்தினைவிட பின்தங்கிய நிலையில் உள்ளோம். இதுபோலவே பல்வேறு நிலைகளில் நாம் காணப்படுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் ஒவ்வொருவரது வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் வளமும் நலமும் பலமும் பெற்று இன்பகரமாக வாழ வேண்டும் என அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்து மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
சுபமங்களம்.
"சிவாகமகலாநிதி "
கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.
சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.