தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் கிளீன்
ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் ஊடாக சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி
செய்யும் முகமாக நகர அபிவிருத்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் ஜி பி சரத்
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு
கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் வேண்டுகோள்க்கு அமைவாகவாக விஜய மேற்கொண்டு இருந்தார்.
ஒல்லாந்தர்
கோட்டையை சுற்றிப் பார்த்த அமைச்சர் அங்கு சுற்றுலா துறையை
வலுப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட வேண்டியஅபிவிருத்தி பணிகள்
சம்பந்தமாகவும் அரசாங்க அதிபர் ஜெ அருள்ராஜ் உடன் கலந்துரையாடினார்
இதேவேளை
பழையமாவட்ட செயலகத்தில் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் நோக்குடன்
அமைக்கப்பட்டுள்ள கைப்பணி பொருள் விற்பனை நிலையத்தையும் பார்வையிட்டார்
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அமைச்சின் உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக
உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வரதன்