ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.