கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இரண்டாம் கட்ட பௌர்ணமி கலைவிழா
2025.10.17 நேற்று மாலை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட பௌர்ணமி கலை நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் , நிருவாக உத்தியோகத்தர், மற்றும் கலைஞர்கள், பொதுமக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலைமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வானது கலைஞர்களின் இசை முழக்கத்துடன் நிறைவுபெற்றது .