
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் 13/10/2025 அன்று
பணிப்பாளர் Dr.ஆர். முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில்
தொற்றா நோய் வைத்திய அதிகாரிகளான Dr.E உதயகுமார், Dr.M.ருதீசன் ஆகியோரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வானது Dr.S.சதுர்முகம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இழையநோயியல் வைத்திய
நிபுனரான Dr.S.அகிலன் அவர்கள் கலந்து சிறபித்ததுடன், அத்துடன்
பிராந்தியத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள், பிராந்தியமேற்பார்வை
தாதிய சகோதரி,பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், நிருவாக
உத்தியோகத்தர், கணக்காளர், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
இதன்போது
பணிப்பாளர் Dr.ஆர் முரளீஸ்வரன் அவர்கள் உரையாற்றும் போது.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிதல் மூலமாக அதிலிருந்து பூரண குணமடைதல் சாத்தியம் என்பதை வலியுறுத்தியதோடு ,
பொதுச்சுகாதார மருத்துவமாதுக்கள் மூலம் வீட்டுத் தரிசிப்பின் போது சுயமார்பக பரிசோதனை வலியுறுத்தப்பட வேண்டும் என்பதனையும், அதனை எவ்வாறு செய்வது என்று கற்பிக்கப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியதுடன்,
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் புற்றுநோயை ஆரம்பத்திலே இனம் காணும் பிரிவு ( Cancer early detection Centre) சம்மந்தமாகவும் விளக்கமளித்தார். பின்பு
இழையநோயியல் வைத்திய நிபுனர் Dr. S. அகிலன் அவர்களினால் மார்பகப் புற்றுநோயின் அடிப்படை தன்மைகளை விளங்கப்படுத்தியதுடன், அதனை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதால் உள்ள நன்மைகளை பற்றி தெளிவுபடுத்தப்பட்டதுடன்,
உத்தியோகத்தர்களது பல்வேறான கேள்வி களுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்.
இறுதியாக உத்தியோகத்தர்களுக்கான மார்பகப் பரிசோதனையானது
மேற்கொள்ளப்பட்டது.