ஹமாஸ் அமைப்பு ஒப்பந்தத்தை
"அப்பட்டமாக மீறியது" என்று கூறி, நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்திய
இஸ்ரேலிய படையினர், காசாவில் போர்நிறுத்தத்தை மீண்டும் செயற்படுத்துவதாகத்
தெரிவித்துள்ளனர்.
ரஃபாவில் தனது துருப்புக்களை நோக்கி
"தீவிரவாதிகள் தாங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் துப்பாக்கிச் சூடு
நடத்தியதாகவும், அதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும்" இஸ்ரேலிய
இராணுவம் கூறியதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
எனினும் இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் எந்தவொரு மோதல்களும் குறித்தும் தமக்குத் தெரியாது" என்று ஹமாஸ் கூறியுள்ளது.
அத்துடன்,இஸ்ரேலின் தாக்குதல்கள் நிலைமையை சரிவை நோக்கித் தள்ளக்கூடும் என்றும் ஹமாஸ் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று மாலைக்குள், காசா
முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களி ல் 44 பேர் கொல்லப்பட்டதாக
மருத்துவமனை தரப்புகள் தெரிவித்துள்ளன.