சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை சுகாதார வைத்திய
அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது
சனிக்கிழமை மாலை நடைபெற்றது
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.பாமினி அச்சுதன் தலைமையின்
நடைபெற்ற இந்நிகழ்வில் கடமை பணிபுரியும் உத்தியோகத்தர் ஊழியர்களின்
பிள்ளைகளை கௌரவித்ததுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும்
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
சிறுவர்களுக்கான பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கு கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
ந.குகதர்சன்