
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மகளிர் அணி உருவாக்கம் , நேற்றையதினம் கேதாரகெளரி பூசையின் இறுதி நாளான காப்பு கட்டினை முன்னிட்டு ஆலய தலைவரின் சிந்தனையில், பாலாம்பிகா மகளிர் அணி உருவாக்கம். இது பற்றி மகளிர் அணியிடம் ஆலய தலைவர் கருத்து தெரிவிக்கையில் கோயில் என்பதும் ஆலயமே குடும்பம் என்பதும் ஆலயமே ஒரு குடும்பத்திற்கு அன்னை எவ்வளவு முக்கியமோ,அது போன்று ஆலயத்துக்கு பெண்களின் பங்களிப்பு முக்கியம். இறைபணியில் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும்,சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் இதற்கு உதாரணமாகும், பெண்கள் தலைமை தாங்கும் நிர்வாகத்தில் சரியைத் தொண்டுகள் அதிகமாக இருக்கும் நிதி சிக்கனத்தையும் கடைப்பிடிப்பார்கள் மகளிர் அணியின் செயற்பாடானது ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்கள் கல்வி மற்றும் எமது பிரதேசத்தில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் அனர்த்த நேரங்களில் மக்களுக்கு சமூக சேவை செய்வதே எமது நோக்கமாகும். இவற்றை செய்வதற்கு எம்மிடம் திறந்த மனசும் ஒற்றுமையும் இருந்தால் போதும் என கூறினார்.
.jpeg)

.jpeg)










