குருக்கள் மடம் இராணுவ முகாமும் இன்னும் ஓர் சில மாதங்களுக்குள் அகற்றப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி நேற்று குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் கழக தலைவர் நா.பிரியதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்ட்டார் விளையாட்டு கழகம் முதலிடத்தையும், குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இதன் போது வெற்றியீட்டிய அணிகளுக்கு கேடயங்களும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்து கொண்டு பேசுகையில் குருக்கள் மடம் இராணுவ முகாம் இன்னும் ஓர் சில மாதங்களுக்குள் அகற்றப்படும் என்றார்.