காரைதீவு விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும் இளம் வீரர்களுக்கான
KSC Junior Premier League 2025 போட்டியும் புதிய சீருடை விநியோகமும் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கழகத்
தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற Junior Premier League கிரிகட்
போட்டிகள் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது வீரர்களுக்கான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது.
ஆரம்ப
நிகழ்வின் போது கழக போசகர்களான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
சிவ.ஜெகராஜன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா,
உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே.இராஜேந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து
சிறப்பித்தனர்.
நான்கு
அணியினராக பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்ட போட்டியில் இளம் வீரர்கள் தமது
விளையாட்டுத்திறமையினையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருத்தனர்.
( காரைதீவு சகா)