இலங்கையின் முன்னணி தனியார் வணிக வங்கிகளில் ஒன்றான ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National Bank, HNB) அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்திலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தனது 855ஆவது தானியங்கி பணவங்கி இயந்திரம் ATM (Automatic Teller Machine) ஒன்றை நிறுவியுள்ளது.
குறித்த ATM (Automatic Teller Machine) இயந்திரத்தின் செயற்பாட்டை
2025.10.27 ஆம் திகதி ஹட்டன் நேஷனல் வங்கியின் கிழக்குப் பிராந்திய வணிகத்
தலைவர் (Regional Business Head) எஸ்.எச்.எம். மக்பூல் மற்றும்
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.
ஜுனைடீன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
“இது பணம் எடுத்தல், பணம் வைப்பு, நிதி பரிமாற்றங்கள், பயன்பாட்டு பில்
கட்டணங்கள், கைபேசிக்கு பணம் அனுப்புதல் மற்றும் எந்தவொரு வங்கிக்
கணக்குக்கும் பண பரிமாற்ற வசதிகளை வழங்குகிறது.”
ஹட்டன் நேஷனல் வங்கியின் நிந்தவூர் கிளையின் முகாமையார் கே. ஜெயபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளான பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர், பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, பல்கலைக்கழக வேலைப்பிரிவின் பொறியியளாளர் எம்.எஸ்.எம்.பசில், விடுதி பணிப்பாளர் யூ.எல். மன்சூர், ஹட்டன் நேஷனல் வங்கியின் சார்பில் எஸ். ரமேஷ் – கிழக்கு மாகாண பிராந்திய Regional Credit Head, ஏ. எல். எஸ். சிறாஜ் அகமட் கிழக்கு மாகாண – Regional Recovery Manager, என். நந்தகோபன் முன்னாள் முகாமையாளர், ஹட்டன் நேஷனல் வங்கி, நிந்தாவூர், அத்துடன் ஹட்டன் நேஷனல் வங்கி கிளை முகாமையாளர்களான; ஏ.எல். றியாஸுடீன் அக்கரைப்பற்று, எஸ். நித்யகுமார் காரைதீவு ஆகியோரும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.





