கணேமுல்ல சஞ்சீவ கொலை
வழக்கின் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவியதாகக்
கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் நவம்பர் 7 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு மற்றும்
பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு
தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு
தொடர்பாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் தற்போது விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள மற்ற சந்தேக நபர்களையும் குறித்த திகதி வரை விளக்கமறியலில்
வைக்க உத்தரவிட்டார்.
பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ளத்
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் மற்ற சந்தேக நபர்கள் ஜூம்
தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.





