ரூ. 6 இலட்சம் பெறுமதியான பணத்துடன் கண்டெடுத்த பணப்பை ஒன்று உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 





பிரதமர் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள், நாரஹென்பிட்டியில் உள்ள திம்பிரிகஸ்யாய வீதியில் தொலைந்து போன பணப்பையை, அதன் உரிமையாளரான வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பொலிஸாரின் கூற்றுப்படி, பொலிஸ் பிரிவு 12093 ஐச் சேர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் யமுனா தம்மிகா குமாரி எதிரிசிங்க மற்றும் கான்ஸ்டபிள் சம்மன்மாலி ஆகியோர் அக்டோபர் 23 அன்று தொலைந்த பணப்பையைக் கண்டெடுத்தனர்.


தொலைந்த பணப்பையின் உரிமையாளரான பிரிட்டிஷ் பிரஜை சப்ரீனா கேமரூன் என்பவர், பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்,

அங்கு பிரிவின் பணிப்பாளரான பொலிஸ் அத்தியட்சகர் சுமித்ரா டி சில்வா அவர்களால் பணப்பை அவரிடம் கையளிக்கப்பட்டது.

அந்தப் பணப்பையில்  6000 இலங்கை  பணமும், அண்ணளவாக 6,00,000 பெறுமதியான வெளிநாட்டு நாணயமும் (யூரோ, அமெரிக்க டொலர், பிரிட்டிஷ் பவுண்டுகள்), அத்துடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கிரெடிட் கார்டுகள், சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு மற்றும் பல வெளிநாட்டு ஆவணங்களும் இருந்தன.