புதிய அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் பிரித்பாராயணங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போது இந்து சமய நிகழ்வுகள் இம்முறை
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது
உணவினால் பாதுகாக்கப்பட்ட
தேசத்தின் முன்னோடி எனும் கருப்பொருளுக்கு அமைவாக இம்முறை மட்டக்களப்பு
மாவட்டத்திலும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆண்டு நிறைவை முன்னிட்டு
ஒரே குலமாக சமநலத்திற்கு முன்னெடுத்துச் சென்று பெருமை சேர்ப்போம்
என்னும்தலைப்பின் கீழ்,
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி
திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எஸ் ஜெகநாத்தின் ஆலோசனை அமைவாக இம்முறை
மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மண்டபத்தடி கமநல சேவை நிலைய பொறுப்பதிகாரி
எம் ஐ எம் பாய்ஸ் தலைமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றது
ஆண்டு நிறைவிற்கான சமய வழிபாடு பூஜை நிகழ்வுகளை ஆரையம்பதி பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ திவாகரன் குருக்கள் நடத்தி வைத்தார்
இந்த நிகழ்வுகளின் போது இப்பிரதேசத்தின் கமநல அமைப்புக்களின்
பிரதிநிதிகள் விவசாயிகள் மண்டபத்தடி கம நல சேவை நிலையத்தின் உயர்
அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வரதன்