கழிப்பறைக்குள் தேங்காய் எண்ணெய்- 6,000 ரூபாய் அபராதம் .

 


 

 பாணந்துறை, கெசல்வத்தை பகுதியில் சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு, கழிப்பறைக்குள் தேங்காய் எண்ணெய் சேமித்து வைத்திருந்தமைக்காக பாணந்துறை மேலதிக நீதவான் ரசாஞ்சலி பெரேரா, 6,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

பாணந்துறை பிரதேச சபையின் கெசல்வத்தை உப அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, வர்த்தக நிலையத்தின் கழிப்பறைக்குள் இரண்டு பிளாஸ்டிக் கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்த 40 லீற்றர் தேங்காய் எண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதவான் இந்த அபராதத்தை விதித்துள்ளார்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் இருப்பை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.