50 மணிநேரம், 50 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்த பொல்லாச்சி விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு, பொல்லாச்சியில் இயங்கி வரும் விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 222 சிலம்பாட்ட மாணவர்கள் இடைவிடாது 50 மணிநேரம், 50 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஒற்றைச் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்தனர். 4 அணிகளாக பிரிக்கப்பட்ட மாணவர்கள், ஒரு அணிக்கு ஒரு மணிநேரம் என்ற அடிப்படையில் இடைவெளி இன்று அணிகள் முறையாக மாறி சிலம்பாட்டத்தை சிறப்பாக செய்து புதிய வரலாறு படைத்தனர்.
இரவு பகல் என இடைவிடாது நடந்த நிகழ்வில் 4 வயது முதல் 50 வரையிலான மாணவர்கள் பங்கு கொண்டனர்.
பள்ளியில் தாளாளர் வணக்கத்திற்குரிய அன்டனி, தலைமை ஆசிரியர் வணக்கத்திற்குரிய ஜோய், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் வணக்கத்திற்குரிய நிமேஷ் போன்றொர் இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்கள்.
மாணவர்களை சிறப்பாக பயிற்சியளித்திருந்த சிலம்பம் பயிற்சி ஆசிரியர் திரு.ஜெகதீஸ்வரன். அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
வரலாற்றில் இவ்வளவு நீண்ட நேரம் ஒன்றிணைந்த குழுவாக இடைவெளியின்றி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தது இதுவே முதல்முறை என சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் கூறினார்.