ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்
மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்
வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினூடாக இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் தரம் 6 இற்கு அனுமதி பெறத் தேவையான அனைத்து நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் இந்தச் சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கம் 31/2025 கொண்ட இந்தச் சுற்றுநிருபத்தை, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.