மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை சிறார்களுக்கு JAZ REEL-பாலர் பாடசாலை சமூகத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

 

 


 











 








































HELPING DAYஎனும் தொனிப்பொருளில்
JAZ  REEL பாலர் பாடசாலை சமூகத்தால்  திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல்  உபகரணங்கள் (பரிசுப்பொதி)  வழங்கி வைக்கும் நிகழ்வு  ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலையில்  இடம் பெற்றது .

 குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்களின் ஒழுங்கு படுத்துதலில்  JAZ REEL- பாலர் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் சிறார்களின் அனுசரணையில் HELPING DAY நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது .

திருப்பெருந்துறை கிராமமானது பலதுறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது,அதுபோல  இங்கு இயங்கும்  ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலையானது  இப் பிரதேசத்தில் பல திறமையான மாணவர்களை,      நற்பிரஜைகளை  உருவாக்கி சமூகத்துக்கு தந்திருக்கிறது .
 சமூகத்தில்  திறமையான மாணவர்களை உருவாக்குவதற்கு முன்பள்ளி பெரும் பங்கு வகிக்கிறது .

 பலவருடங்களுக்கு முன் கற்றலுக்குரிய அக, புற சூழல் வளங்களை கொண்ட  இவ் முன்பள்ளியானது தற்போது பெரும் சவால்களுக்கு மத்தியில் இயங்கி கொண்டிருப்பதாக   அறிய முடிகிறது .
பெற்றோர்கள் நகர்ப்புற முன்பள்ளிகளில் தமது குழந்தைகளை இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது , இது தவிக்கப்பட வேண்டியதொன்றாகும். 

 பிறந்த கிராமத்திலேயே தமது பிள்ளைகளை  கற்பித்து திறமையான மாணவர்களை உருவாக்கி சமுதாயத்தை  மேன்மைப்படுத்த வேண்டியது   பெற்றோரின் கடமையாகும் .
திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலையின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்து ,  குழந்தைகளை முன்பள்ளியில்  சேர்த்து மட்டு மாவட்டத்தில் சிறந்த ஒரு முன் பள்ளியாக விளங்க உங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் .

 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பது நம்மிடம் உள்ள முதுமொழி. ஐந்தில் வளைத்துவிட்டால் ஐம்பதில் வளைவது எளிதாகும். அதனால் சின்னஞ் சிறுபருவத்திலேயே சீரிய குடி மக்களாக்குவதற்கு ஏற்ற வகையில் பயிற்சி தருவது நாட்டிற்கும் வீட்டிற்கும் நலம் தரும். சிறுவர்கள் ஒழுங்கான முறையில் கல்வியைப் பெறுவதற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு  முன்பள்ளி ஆசிரியர்களாலே முடியும்    ஒரு மாணவனின் அறிவுக்கண் திறப்பதற்குத் துணை செய்வதில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஆரம்பக்கல்வி ஒழுங்காக அமைந்தால் தொடர்ந்து மாணவன் பெறும் கல்வி சீராக இருக்கும்.

EDITOR.