கொழும்பு, இலங்கை – அக்டோபர் 7, 2025: ஆணிவேர் உற்பதிகளின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரான திருமதி சுஜிகா ஜனகன், கொழும்பு Cinnamon Lakeside-இல் நடைபெற்ற Women in Management (WIM) MSME Awards 2025 விழாவில் “Eastern Province – Emerging Exporter (Small Enterprise)” பிரிவில் தேசிய விருதைப் பெற்றார்.
இந்த விழா Women in Management (WIM) மற்றும் MSME துறை இணைந்து நடத்தியது. இது தங்கள் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு, புதுமை, தலைமைத்திறன் மற்றும் சமூக தாக்கம் ஏற்படுத்திய இலங்கையெங்கும் உள்ள மகளிர் தொழில்முனைவோரக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஆணையர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
திருமதி சுஜிகா ஜனகன், தமது ஆணிவேர் உற்பதிகளின் மூலமாக பாரம்பரிய சிறுதானிய உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, பெண்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகளை வலுப்படுத்துவதில் செய்த பங்களிப்பிற்காக இந்த விருதை பெற்றார்.
விருது பெற்ற பின் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட சுஜிகா ஜனகன் கூறியதாவது:
“இந்த அங்கீகாரம் என் தனிப்பட்ட சாதனையல்ல – இது எங்கள் முழு ஆணிவேர் குழுவின் வெற்றியாகும். என் இணை நிறுவனர் திருமதி விஜயபரணி ஜயசுதனுக்கு எனது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து, சமூக நலனுக்காக நிலைத்திருக்கும் மாற்றத்தை உருவாக்க கடமையுடன் செயல்படுகிறோம்.”
Women in Management MSME Awards 2025 இவ்வாண்டுடன் அதன் 15வது ஆண்டு விழாவை எட்டியுள்ளது. இது இலங்கையில் மகளிர் தொழில்முனைவோர்களின் சாதனைகளையும் அவர்களின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் வகிக்கும் பங்களிப்பையும் சிறப்பிக்கும் ஒரு முக்கிய மேடை ஆகும்.
இந்த தேசிய கௌரவம், ஆணிவேர் உற்பதிகளின் ஒரு பெருமையான மைல்கல் ஆகும்; இது கிழக்கு மாகாணத்தின் பெருமையை பிரதிநிதித்துவப்படுத்தி, பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு வழியாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நிறுவனத்தின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இது கிழக்கு மாகாண வரலாற்றில் மகளிர் தொழில்முனைவோர் சுஜிகா ஜனகன் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு விருது என்பது மட்டக்களப்புக்கு பெருமையாகும்