40 பதக்கங்ககளை வென்றெடுத்து இலங்கை வீரர்கள் தாயகம் வந்தடைந்தனர்.

 


இந்தியாவில் நடைபெற்ற 4வது தென் ஆசிய மூத்த தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 16 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்களை வென்ற இலங்கை தடகள அணியினர் இன்று (28) காலை தாயகத்திற்கு வந்தடைந்தனர்.

இந்தப் போட்டி தென் ஆசியப் பிராந்திய நாடுகளின் தடகள வீரர்களின் பங்கேற்புடன் இந்தியாவின் ராஞ்சி நகரில் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்று முடிந்தது.

இலங்கை தடகள வீரர்களை வரவேற்க இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, முப்படைத் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டாளர்களின் பெற்றோர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.