34
வருட அரச உயர் சேவைகளிலிருந்து முன்னாள் யாழ். அரசாங்க அதிபரும், நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், தேசிய
ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயமாகவும்
கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் தனது 60 வது அகவையில் நேற்று முன்தினம்
(20)ஓய்வு பெற்றார்.
காரைதீவைச்
சேர்ந்த க.மகேசன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கலை
பட்டதாரியாகவும் பின்னர், வியாபார நிருவாக முதுகலைமாணியை யும் ,சர்வதேச
உறவுகள் பட்டப் பின் டிப்ளோமாவையும், சட்டமாணியையும் பூர்த்தி
செய்துள்ளார்.
இவர்
முதலில் வாழைச்சேனை, செங்கலடி ,வவுணதீவு, பட்டிப்பளை பிரதேச செயலாளராக
சேவையாற்றி பின்னர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும்
,கென்யா இலங்கை தூதரக கவுன்சிலராகவும் ,யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகவும்,
விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார்.
இறுதியாக
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும்
சேவையாற்றி கடந்த வெள்ளியன்று அரச சேவையில் இருந்து விடைபெற்றார்.
யாழ்
பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினராக இறுதி வரை சேவையாற்றிய அவர் கொழும்பு
தெற்கு ரோட்டரி கழக முன்னாள் தலைவராக மற்றும் பல நிறுவனங்களின் தலைவராக
உறுப்பினராக இருந்து சமூகப் பணியாற்றியுள்ளார்.
( வி.ரி. சகாதேவராஜா)





