சீரற்ற வானிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்கள் காரணமாக நான்கு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

அண்மைய நாட்களில் தொடர்ந்து பெய்த மழையால் சுமார் 480 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதகமான வானிலையால் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் 117 என்ற துரித இலக்கத்தின் மூலமாக தொடர்பு கொள்ளுமாறும் DMC பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.