சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 30 இந்திய மீனவர்கள் கைது .

 


நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சமீபத்தில் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை கடற்படையின் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதன் போது இந்திய மீனவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, 30 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். 

மேலதிக விசாரணைகளை மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகம் மற்றும் கடற்படையினரும்  மேற்கொண்டு வருகின்றனர்.